சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்
ஆரணி நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஆரணி
தமிழக அரசு நகரங்களின் தூய்மையினை மேம்படுத்திடவும் தூய்மை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த இயக்கம் மூலம் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம், எனக்கு பெருமை என்ற உறுதிமொழி ஏற்று, கடந்த ஜூன் மாதம் முதல் ஆரணி நகராட்சியில் களப்பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாரி பி.பாபு முன்னிலையில் வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், அலுவலகம் மேலாளர் நெடுமாறன் மற்றும் சுகாதாரப் பிரிவினர், களப்பணியாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.