வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் உழவர் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஊரக இளைஞர்களுக்கான வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி அங்கக உற்பத்தியாளர்கள் என்ற தலைப்பில் 15 நாட்கள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 17 இளைஞர்களுக்கான பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி உழவர் பயிற்சி நிலையத்தில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் அரக்குமார் தலைமை தாங்கி பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் துணை இயக்குனர்கள் அசோக்குமார் (நுண்ணீர்பாசனம்), ஏழுமலை (மத்திய அரசு திட்டம்), ராமநாதன் (உழவர் பயிற்சி நிலையம்) மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் இளைஞர்களுக்கு அங்கக விவசாயம் குறித்த முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்பட்டது.