பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.

Update: 2023-05-15 18:45 GMT

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் தங்களுடைய உயர் கல்வியை தொடர்வதற்கு வசதியாக தற்காலிக மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை கடந்த 12-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்து வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) ஜெகதீசன் சான்றிதழ் கேட்டு வந்த மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் வழங்கினார். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், இப்பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை 198 பள்ளிகளை சார்ந்த 8,852 மாணவர்களும், 9,375 மாணவிகளும், மாற்றுபாலினத்தவர்-1 என மொத்தம் 18,228 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 8,509 மாணவர்களும் 9,160 மாணவிகளும், மாற்றுபாலினத்தவர்-1 என மொத்தம் 17,670 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்