விளையாட்டு விழா

விளையாட்டு விழா நடைபெற்றது

Update: 2023-05-31 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே விசாலயங்கோட்டை கலாம் கவி கிராமத்தில் உள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கினார். முதல்வர் கருணாநிதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி முதல்வர் முரளி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்ட பின்பு கல்லூரியில் குதிரை ஏற்ற பயிற்சியாளர் வினய் தேசிய கொடியினை ஏந்தியபடி குதிரையில் சுற்றி வந்தார். அதன்பின் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க, மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சேது பாஸ்கரா கல்லூரி மாணவர்கள் ஜோதியை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்தனர். கல்லூரி உடற்கல்வி ஆசிரியை சங்கீதா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்