நல்லம்பள்ளி:
பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி ஈச்சம்பட்டியில் மாரியம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள் தலைமீது கூழ் குடம் சுமந்து வந்து, அம்மனுக்கு கூழ் ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளை கூன்மாரியம்மன் மற்றும் கொட்டாவூர் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 26-ந் தேதி கால்மாரியம்மன், ஊர் மாரியம்மன் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.