அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா

அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடக்கிறது

Update: 2023-05-16 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தில் புகழ்பெற்ற தண்டீஸ்வர அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேக விழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த ஆண்டு 41-வது வருடாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் காப்பு கட்டுதலுடன் விழா நேற்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தண்டீஸ்வர அய்யனார் சுவாமிக்கும் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கும் வருடாபிஷேக தீர்த்த பூஜை உற்சவ விழா நடைபெறுகிறது. அன்னதானமும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் விசேஷ பூஜைகள் மற்றும் நாடகங்கள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்