வாசவி ஜெயந்தி விழா

வாசவி ஜெயந்தி விழா கொண்டாட்ப்பட்டது

Update: 2023-05-01 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் ஆரிய வைசிய மகா சபைக்கு பாத்தியப்பட்ட கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது. ஆரிய வைசிய மகாஜன சபையின் தலைவர் முத்துலட்சுமணன் தலைமை தாங்கினார். ஆரிய வைசிய மகளிர் சபா தலைவி நாகலட்சுமி பாலா முன்னிலை வகித்தார். இதையொட்டி வாசவி சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வாசவி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலித்தார். பின்னர் மாவிளக்கு, வாசவி சகஸ்ர நாமம், மகளிர் பாராயணம் செய்தல், லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்