நெல் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி கொள்முதல் செய்வது குறித்து தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு

நெல் ஈரப்பத அளவை அதிகரித்து கொள்முதல் செய்வது குறித்து தஞ்சாவூரில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-10-15 11:43 GMT

தஞ்சாவூர்,

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து விவசாயிகளிடமிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கக் கோரி என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இந்த நிலையில் ஐதராபாத் உணவு தர கட்டுப்பாட்டுப் பிரிவு துணை இயக்குனர், சென்னை உணவு தர கட்டுப்பாட்டுப் பிரிவின் தொழில்நுட்ப அதிகாரி ஆகியோர் தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஈரப்பதத்திற்கான காரணம் குறித்து விவசாயிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இந்த ஆண்டு குறுவை சாகுபடி அமோகமாக நடைபெற்ற போதிலும், அறுவடை காலத்தில் தொடர் மழை பெய்த காரணத்தால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதாகவும், கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்