எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிந்த பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு
எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
சென்னை,
எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிந்த பகுதியில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதியில் கச்சா எண்ணெய் கலந்தது. அந்த பகுதியை தமிழக அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் .
தேவையான ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. எண்ணூர் கிரீக் பகுதியில், மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெயை உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.