மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-12-01 19:20 GMT

1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கரூர் கிளை தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், கரூர் மண்டல செயலாளர் தனபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்