சிமெண்டு சாலை- அங்கன்வாடி திறப்பு விழா

கடையம் அருகே சிமெண்டு சாலை- அங்கன்வாடி திறப்பு விழா நடந்தது.

Update: 2023-03-31 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி, ரூ.7 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை மற்றும் சமையல் கூடம் திறப்பு விழா, ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அடிக்கல் நாட்டு விழா ஆகியன நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா ஷாகிப், சசிகுமார், மோகன், அர்ஜூனன், ஒன்றிய துணைச் செயலாளர் அந்தோணி தாமஸ் அருள், சதாம் உசேன், பக்கீர் மைதீன், மைதீன் பீவி, கோதர் மைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி மிக்கேல் சங்கர், ரம்யா ராம்குமார், ஜஹாங்கீர், ஊராட்சி தலைவர்கள் சன்னத் சதாம் முகமது உசேன், வளர்மதி சங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்