பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் சஞ்சய் (வயது 17). இவன் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். இந்தநிலையில் சஞ்சய் தனது தந்தையிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கிருஷ்ணன் மறுத்துள்ளார். இதனால் சஞ்சய் கோபித்து கொண்டு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தான். அவனை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலக்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.