மதுரையில் 3 பேரிடம் செல்போன் பறிப்பு: மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பேர் கைது
மதுரையில் வாலிபர்கள் உள்பட 3 பேரிடம் செல்போன் பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் வாலிபர்கள் உள்பட 3 பேரிடம் செல்போன் பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் பறிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த நூர்முகம்மது (வயது19). சம்பவத்தன்று நள்ளிரவு அவர் பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.அவர்கள் நூர்முகம்மதுவை கத்தியை காட்டி மிரட்டி, அவரை தாக்கி ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ராமசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ் (26). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் டோக் நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் மணிபர்சை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 பேர் கைது
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அதன் பேரில் கரிமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர்.
இந்த நிலையில் கரிமேடு பகுதியில் ஒருவரிடம் செல்போன் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் போது தனிப்படை போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். அதில் கரிமேடு யோகனந்த சுவாமி மடத்தை சேர்ந்த சல்மான்அகமது (19), செல்லூர் அருள்தாஸ்புரம் சோந்த தவளை சரவணன்(22) ஆகியோரை கைது செய்தனர். இவர்களை பிடித்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.