செல்போன் திருடியவர் கைது
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சை பிரிவில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை, ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா (28) என்பவர் நைசாக திருடினார். இதைக்கண்ட அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் ஜோஸ்வாவை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அன்ன ராஜா வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.