செல்போன் திருடியவர் கைது

செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-19 13:20 GMT

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவர் உப்பிலியபுரத்தை அடுத்த எரகுடி ஊராட்சி கீழப்பட்டியிலுள்ள தனது மாமியார் வெள்ளையம்மாள் வீட்டுக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் வீட்டில் வைத்து இருந்து அவரது செல்போனை திருடியதாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கவம் வள்ளுவர் தெருவை சேர்ந்த பகவதி என்பவரை உப்பிலியபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கட்டில் விற்பது போல் வந்து செல்போனை திருடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்