அடுத்தடுத்து 6 வீடுகளில் செல்போன் திருட்டு
அணைக்கட்டு அருகே அடுத்தடுத்து 6 வீடுகளில் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கோடை வெயிலும், கத்திரி வெயிலும் அதிகரித்துள்ளதால் ஏற்படும் புழுக்கம் காரணமாக பொதுமக்கள் இரவில் கதவுகளைத் திறந்து வைத்து விட்டு தூங்குகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் ஏரிபுதூர் பகுதியில் ஒரே இரவில் 6 வீடுகளுக்குள் புகுந்து விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து செல்போனை பறிகொடுத்த பொதுமக்கள் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால் புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பி அனுப்பி விடுகின்றனர். செல்போன்கள் திருட்டு போனால் உடனடியாக கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் போலீசார் புகார்களை கூட வாங்க மறுக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.