வாலிபரிடம் செல்போன் பறிப்பு

நெல்லையில் வாலிபரிடம் செல்போன் பறித்து சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-28 19:24 GMT

நெல்லை ராமையன்பட்டி அரசு புதுக்காலனியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 29). இவர் சம்பவத்தன்று வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் ஒரு வணிக வளாகம் முன்பு நின்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அழகர்சாமியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்