பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் கைதியிடமிருந்து செல்போன் பேட்டரி பறிமுதல்

பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியிடமிருந்து செல்போன் பேட்டரி பறிமுதல் செய்தனர்.

Update: 2022-07-02 08:23 GMT

பூந்தமல்லி:

கும்பகோணம் அடுத்த திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அந்த பகுதியில் இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்ததை எதிர்த்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு இந்த வழக்கில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஜாம் அலி என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று பூந்தமல்லி தனி கிளை சிறை வார்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிஜாம் அலி தங்கி இருந்த அறையில் செல்போன், சார்ஜர், பேட்டரி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை பறிமுதல் செய்த சிறை காவலர்கள் இது குறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் நிஜாம் அலிக்கு செல்போன், பேட்டரிகளை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சிறையில் கைதிகளிடம் அடிக்கடி செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்