மகளிர் தின விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
கீழக்கரை,
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பரதநாட்டியம் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்த பெண் வக்கீல் நாதியா ஹனிபா கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றி போராடிய இந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர், பெண்களுக்கு வாக்குரிமை பெறுவதற்கு போராடிய மிதன் லாமின் மற்றும் பெண்கள் கல்வி சாலையை உருவாக்குவதற்கு பாடுபட்ட பாத்திமா ஷேக், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ேறார் பெண்களின் உரிமைக்காக பாடுபட்டது குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகளிர் விரைவு குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், கூடுதல் மகளிர் நீதித்துறை நடுவர் வெர்ஜின், மாவட்ட முன்சீப் நீதிபதி நீலவேஸ்வரன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகரன், தலைவர் நிரந்தர லோக் அதாலத் நீதிபதி பரணிதரன், ராமநாதபுரம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ஷேக் இப்ராஹிம் உள்பட அனைத்து வக்கீல்களும் கலந்து கொண்டனர்.