பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்புஅ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதை வரவேற்று கம்பைநல்லூர், மாரண்டஅள்ளியில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
மொரப்பூர்
பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வுக்கு தடை இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொண்டார்.
இதை வரவேற்று மொரப்பூர் மேற்கு ஒன்றிய மற்றும் கம்பைநல்லூர் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.மகாலிங்கம், நகர செயலாளர் கே.கே.தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் பேரூராட்சி கவுன்சிலர் தீ.சரவணன், செங்குட்டை எஸ்.கலையரசன், ஒன்றிய பொருளாளர் வக்கீல் சி.பழனிவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அறிவானந்தம், வகுரப்பம்பட்டி சரவணன், கம்பைநல்லூர் நகர இணை செயலாளர் முத்து நாயகி, தீனா பாபு, போதுமணி, சிங்காரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாரண்டஅள்ளி
மாரண்டஅள்ளியில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நாகராசன் முன்னிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், அத்திமூட்லு ஊராட்சி மன்ற தலைவர் மாதுராஜ், துணைத்தலைவர் ராணி முனுசாமி, கவுன்சிலர் அனிதா ரமேஷ், சாமனூர் கிளை செயலாளர் சிவம், ரவி, நிர்வாகிகள் வெங்கடேசன், சுரேஷ், அரவிந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.