நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்பதிவு செய்வது தொடங்கியதையொட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-23 17:23 GMT

முன்பதிவு செய்வது தொடங்கியதையொட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டு காரீப் சம்பா பருவத்தில் முதல் கட்டமாக 22 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் வருகிற 2-ந் தேதி முதல் செயல்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. தேசிய விவசாயிகள் தினத்தன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு தொடங்கியதை வரவேற்று திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல அலுவலகத்தின் முன்பு வாக்கடை புருசோத்தமன் தலைமையிலான விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ''தமிழக அரசு 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் மின் பம்பு செட் இணைப்பு வழங்கி உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவிற்கு ரூ.21.60-க்கு கொள்முதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறோம்'' என்றனர். விழாவில் நார்த்தாம்பூண்டி சிவக்குமார், ஜெயகாந்த் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்