பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குஜராத் மாநிலம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி கொடைரோட்டில் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
குஜராத் மாநிலம் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ.க.வினர் கொடைரோடு, கொடை ரோடு சுங்கச்சாவடி பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கும், அய்யப்ப பக்தர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை பா.ஜ.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ராணி கருப்புசாமி தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.