அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-09-03 18:28 GMT

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து அணைக்கட்டு பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் த.வேலழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாபுஜி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்