நூதன முறையில் விடுமுறை கொண்டாட்டம்; ஆட்டோவில் தமிழகத்தை சுற்றி வரும் அமெரிக்க சகோதரர்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த சகோதர்கள் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களை ஆட்டோவிலேயே சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

Update: 2022-12-31 12:18 GMT

சென்னை,

அமெரிக்காவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சகோதரர்கள் பிரைஸ் மற்றும் டைலர். இவர்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை வித்தியாசமான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இந்த சமயத்தில் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சம்பளத்துடன் கூடிய ஒரு வார விடுமுறையை வழங்கியுள்ளனர். இதையடுத்து சகோதரர்கள் இருவரும் இந்தியாவிற்கு வந்து ஆட்டோவில் ஊரை சுற்றிப்பார்க்க வேண்டும் என முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளனர்.

அதன்படி தமிழகத்திற்கு வருகை தந்த பிரைஸ் மற்றும் டைலர் சகோதர்கள், ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து, தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களை ஆட்டோவிலேயே சுற்றிப் பார்த்து வருகின்றனர். ஆட்டோவை அண்ணன் மற்றும் தம்பி இருவரும் மாறி, மாறி ஓட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு ஆட்டோவில் செல்வதன் மூலம் இயற்கை அழகை நன்றாக ரசிக்க முடிவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தூங்காநகரமான மதுரையில் கொண்டாட இருப்பதாகவும், தங்களது இந்த ஆட்டோ சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாகவும் பிரைஸ் மற்றும் டைலர் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்