குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-08-26 19:22 GMT

கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கான குறுவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 14, 17, 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதனை பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி தொடங்கி வைத்தார். இதில் 30 குழுக்கள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் கோமாபுரம் உயர்நிலை பள்ளியை சேர்ந்த 14 மற்றும் 17 வயதுக்கான பெண்கள் கபடி குழுக்களும், 19 வயதிற்கான பெண்கள் கபடி குழுவில் கந்தர்வகோட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியும் முதலிடங்களை பிடித்தன.

Tags:    

மேலும் செய்திகள்