சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2023-05-13 18:45 GMT

வடக்கன்குளம்;

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 66 பேரும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி அடைந்தனர். மாணவர் பிரஜேஷ் குமார் 494 மதிப்பெண்கள் பெற்று தென்மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். மாணவி மெலினா விண்ணரசி 485 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மாணவி சுபாஸ்ரீ 483 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர்.

10 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றனர். 470-க்கு மேல் 8 மாணவர்களும், 450-க்கு மேல் 13 மாணவர்களும், 400-க்கு மேல் 37 மாணவர்களும் பெற்றனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைவர் கிரகாம்பெல், மெட்ரிக் பள்ளி தாளாளர் திவாகரன், சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் அஜேஸ் லால், பள்ளி நிர்வாகி பிந்து, முதல்வர் பாலபெஞ்சமின் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்