சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட நகலை கிழித்து போராட்டம்

பள்ளிகளில் சாதிய பாகுபாடு கற்பிக்கப்படுவதாக கூறி சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-26 18:45 GMT

கோவை

பள்ளிகளில் சாதிய பாகுபாடு கற்பிக்கப்படுவதாக கூறி சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பில் வர்ணாஸ்ரம முறைகள் என்ற தலைப்பில் சாதிய பாகுபாடு கற்பிக்கப்படுவதாக கூறி பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதை பாடத்திட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் அந்த கட்சியை சேர்ந்த பலர் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பாடத்திட்டத்தில் வர்ணாஸ்ரம முறைகள் இருப்பதை உடனடியாக நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

15 பேர் கைது

பின்னர் அவர்கள் தங்கள் கையில் இருந்த அந்த பாடத்திட்ட நகலை கிழித்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்கள் கையில் இருந்த அந்த பாடத்திட்ட நகலை பிடுங்கினார்கள். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கு.ராமகிருட்டிணன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து, கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மதியம் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்