3 மாதத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்கும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு 3 மாதத்திற்குள் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்கும் என குடிநீர்வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.

Update: 2023-02-05 18:18 GMT

குழாய் இணைக்கும் பணி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 50 ஊராட்சிகளில், 759 கிராமங்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ெசயல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்காக வேலூர் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்ட 1,500 அடி விட்டம் கொண்ட ராட்சத குழாயில் இருந்து, திருப்பத்தூர் புதுப்பேட்டை கூட்ரோடு அருகே சுமார் 10 அடி ஆழத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியை குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார்.

3 மாதத்திற்குள்...

பின்னர் அவர் கூறுகையில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, மேட்டூர் வழியாக ராட்சத பைப்புகள் அமைக்கப்பட்டு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம் வரை செல்கிறது. இந்த திட்டம் ரூ.144.21 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 50 பஞ்சாயத்துகள், 759 குக்கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கப்பட உள்ளது.

இதற்கான குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் பணிகள் முழுமையடையும். தற்போது ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் பணி 88 சதவீதம் முடிவடைந்துள்ளது. மூன்று மாத காலத்திற்குள் ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீர் கிடைக்கும் என தெரிவித்தார்.

அப்ேபாது நிர்வாக பொறியாளர் மாணிக்கம், உதவி நிர்வாக பொறியாளர்கள் பற்குணன், தேசிங்குராஜா மற்றும் உதவி பொறியாளர் பிரகாசம் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்