காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி பயணம்

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி செல்கிறார்.

Update: 2023-09-17 09:11 GMT

சென்னை,

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விடாததற்கு உண்மைக்கு புறம்பாக பல காரணங்களை மத்திய ஜல்சக்தி மந்திரியிடம் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய ஜல்சக்தி மந்திரியிடம் மனு கொடுப்பார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் நாளை (திங்கட்கிழமை) காலை டெல்லி செல்கிறார். டெல்லியில் ஜல்சக்தி துறை மந்திரி ஷெகாவத்தை சந்தித்து, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கி மனு கொடுப்பதுடன் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்