சாலையில் கால்நடைகளை திரிய விடக்கூடாது

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கால்நடைகளை திரிய விடக்கூடாது என்று நாகை கலெக்டர் கூறினாா்.

Update: 2022-08-24 18:17 GMT

வெளிப்பாளையம்:

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கால்நடைகளை திரிய விடக்கூடாது என்று நாகை கலெக்டர் கூறினாா். இது குறித்து நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாங்கண்ணி திருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா 29-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. எனவே தனி நபர் கவனிப்பாரின்றி சாலைகளிலும், புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் கால்நடைகளை திரிய விடாமல் தங்களின் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமை கோராத கால்நடைகளை பிடித்து கோசாலையில் விடப்படும்.

இறைச்சி விற்பனை

இறைச்சி விற்பனை செய்பவர்கள் நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு முத்திரை வைக்கப்பட்ட இறைச்சிகளையே சுகாதார முறையில் விற்பனை செய்ய வேண்டும்.முத்திரை வைக்காத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். .பொதுமக்கள் பரிசோதனை செய்து முத்திரையிடப்பட்ட இறைச்சியை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். அன்னதான கூடத்தில் முத்திரையிடப்பட்ட இறைச்சியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்