கால்நடை வளர்ப்போர் சங்க கூட்டம்

சிவகங்கை மாவட்டம் கொங்கம்பட்டியில் கால்நடை வளர்ப்போர் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-03 18:45 GMT

சிவகங்கை மாவட்டம் கொங்கம்பட்டியில் கால்நடை வளர்ப்போர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். செயலாளர் குமார், பொருளாளர் சம்சுதீன், உறுப்பினர்கள் சரவணன், செந்தில்குமார், ஷேக்சாகுல் ஹமீது, பழனிகண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும், நலவாரியம் அமைக்க வேண்டும், கால்நடை வளர்ப்போருக்கு பசு, கிசான் அட்டை வழங்க வேண்டும், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களை தமிழக அரசு ஏற்படுத்திதர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்