ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்தால் கடும் நடவடிக்கை

பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்தால் கடு்ம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-09-09 17:02 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்தால் கடு்ம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலெக்டர் உத்தரவு

ஆப்பிரிக்க கெளுத்தி மீன் என்பவை மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய மீன்கள் ஆகும். இந்த மீன்கள் தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை அழித்துவிடும் திறன் கொண்டவை. எனவே தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பது சட்டப்படி குற்றம். இந்த மீன்களை யாரும் வளர்க்க கூடாது என்று மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கலெக்டரின் உத்தரவை மீறி பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் சொட்டாண்டஅள்ளி உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட மீன் பண்ணைகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் வளர்க்கப்படுகிறது. இந்த பண்ணைகளில் மீன்களை வளர்த்து உள்ளூர், வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து காரிமங்கலம் தாசில்தார் சுகுமார் கூறுகையில், இந்த மீன்களை சாப்பிடுவதால் வயிற்று உபாதைகள், உடல் அரிப்பு, சொரியாசிஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்த மீன்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையை தடுக்க போலீசார், வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் தனி குழுவை கலெக்டர் அமைத்து உள்ளார். தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் வளர்த்தால் பண்ணையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்