சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்-சீமான் பேச்சு

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதுகுளத்தூரில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

Update: 2022-12-17 18:45 GMT

முதுகுளத்தூர், 

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதுகுளத்தூரில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி முருகன், சிவக்குமார், ராசு, வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறைவாக உள்ள சாதியினருக்கு அதிக இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர். பெரும்பான்மையாக உள்ள சாதியினருக்கு குறைந்த சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளனர். தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இடஒதுக்கீடு

சாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியம் என்று நீதிமன்றம் கூறியதால், நாம் தற்போது இந்த பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்பதை நீக்கி மக்கள் தொகை, சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் காமராஜ், செல்லத்துரை, இளங்கோவன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் குமரன், சிவகங்கை நாடாளுமன்ற ெதாகுதி மண்டல செயலாளர் கரு.சாயல்ராம், மாவட்ட நிர்வாகிகள் பசீர் அகமது, வினோத் குமார், இளவரசன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்