தேசிய நெடுஞ்சாலையில் அம்மா உணவகம் தொடங்க கோரி வழக்கு; ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

தேசிய நெடுஞ்சாலையில் அம்மா உணவகம் தொடங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2022-05-30 14:52 GMT

சென்னை:

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் அய்யா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக 2013-ம் ஆண்டு அம்மா உணவக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வேறு பெயர்களில் அம்மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் உணவகங்கள் அமைந்துள்ளது. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், பயணிகள், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். பயணிகளுக்கும், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்டோருக்கும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் விதமாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா உணவகங்கள் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்