தாம்பரம் திமுக எம்.எல்.ஏ ராஜா மீது வழக்குப்பதிவு

எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-09-22 01:11 GMT

தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், எஸ்.ஆர்.ராஜா சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவர் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வெளியானது.

இந்த நிலையில் தந்தி டிவிக்கு இது குறித்து எஸ்.ஆர்.ராஜா விளக்கமளித்துள்ளார்.அவர் கூறியதாவது ;

எனது நண்பரை சிலர் நிறுவனத்திற்கு நேரில் அனுமதிக்கவில்லை .அவர்கள் நிறுவனத்திற்கு நேரில் சென்றேன் .அவர்கள் பேசியதை கட் செய்துவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.எங்களை அனுமதிக்க மறுத்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசினார் என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்