புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நொய்யல் குறுக்கு சாலை பகுதிகளில் வேலாயுதம்பாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் நொய்யல் குறுக்கு சாலையில் பரமத்தி செல்லும் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக கடையின் உரிமையாளர் முருகேசன் (வயது 57) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.