4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

மதுக்கடை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2022-09-19 20:28 GMT

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே நேற்று முன்தினம் பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் பிரேம்(வயது31) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து பிரேமின் அண்ணன் முத்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நடுக்காவேரி போலீசார் பிரேம் கொலை வழக்கில் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (33), பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பவர்சிங் மகன் விஷ்வபிரசாத் (23), முருகையன் மகன் புல்லாண்டு (என்ற) பிரகாஷ் (34), பள்ளியக்ரஹாரம் பெரியதெருவை சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா (25) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்