ராமேசுவரத்தில் 97 விசைப்படகுகள் மீது வழக்குப்பதிவு...! 4 டன் மீன்கள் பறிமுதல்...!
ராமேசுவரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 97 விசைப்படகுகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நாட்டுப்படகு மற்றும் கரையோர மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.
இதனை அடிப்படையில் ராமேசுவரம் மற்றும் மண்டவம் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று கடலுக்குள் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ராமேசுவரம் வடக்கு கடலில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்பத்தியும், மீன்பிடி அனுமதி சீட்டு இல்லாமலும் விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்தது தெரியவந்தது.
இதனை அடுத்து 97 படகுகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 டன் மீன்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.