வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு
மயிலாடுதுறையில் வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா நத்தம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் திலீப் மகன் ராஜாஜி (வயது 52). வக்கீலான இவர், சீர்காழி தாலுகா சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த தனது தரப்பினருக்கு ஆதரவாக மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பை சேர்ந்த சிலர் வக்கீல் ராஜாஜியை கேவலமாக திட்டியதோடு, தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வக்கீல் ராஜாஜி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சிங், ரமேஷ், பாலச்சந்திரன் ஆகிய 3 பேர் உள்பட 6 பேர் மீது வக்கீலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.