ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை திருடியதாக சிவி சண்முகம் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-25 10:59 GMT

சென்னை,

கடந்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக சிவி சண்முகம் தரப்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சிவி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்