தொழிலாளியை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-15 18:45 GMT

கண்டாச்சிபுரம் தாலுகா ஏ.கூடலூரை சேர்ந்தவர் பாலு(வயது 51), தொழிலாளியான இவர் குடிபோதையில் ஆயந்தூரில் உள்ள அரிகிருஷ்ணன் என்பவருடைய ஓட்டல் அருகில் படுத்திருந்தார். இதைப்பார்த்த அரிகிருஷ்ணன், பாலுவிடம் சென்று ஏன் இங்கு படுத்திருக்கிறாய், உடனே எழுந்து செல் என்று கூறி பாலுவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலு கொடுத்த புகாரின் பேரில் அரிகிருஷ்ணன் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்