மனைவியை தாக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது வழக்கு
மனைவியை தாக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். கடந்த 20 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா (வயது 33). இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஊருக்கு வந்திருந்த பாலமுருகனிடம் மனைவி பிரேமா வீட்டு செலவுக்கு பணம் கேட்டார். அப்போது அவர் பிரேமாவை தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.