ரெயில் படிக்கட்டில் தொங்கி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 6 பேர் மீது வழக்கு
ரெயில் படிக்கட்டில் தொங்கி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயிலில் அடிக்கடி கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடியும், கூச்சலிட்டபடியும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கல்லூரி மாணவர்களான விஜயகுமார், பாலா, தீபக், சந்தோஷ் குமார், ஆகாஷ், சரத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.