டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு

டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-06 19:17 GMT

லாலாபேட்டை அருகே உள்ள கொமட்டேரி பகுதியை சேர்ந்தவர் மூக்கன் (வயது 55). டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தினகரன், சிவனேசன், சிவக்குமார் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே கோவில் பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று மூக்கன் வீட்டிற்கு சென்ற தினகரன், சிவனேசன், சிவகுமார் ஆகிய 3 பேரும் தகராறு செய்து மூக்கனை கடப்பாரையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்