அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

சிதம்பரத்தில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-24 19:37 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது நடராஜா கார்டனில் உள்ள தனியார் பார்சல் சென்டரில் அனுமதியின்றி வைத்திருந்த ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஆதிவராகநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் ஸ்டாலின் (வயது 44) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சிதம்பரம் விலகியம்மன் கோவில் தெருவில் அனுமதியின்றி வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பி.முட்லூரை சேர்ந்த செல்வம் (30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்