வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி மீது வழக்கு

பெரியகுளம் அருகே வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-02-01 17:13 GMT

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார். இவர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் தம்பி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் கல்லால் அவரை தாக்கியுள்ளார்.

மேலும் ராஜ்குமாரும், அவரது தம்பி ரமேசும் சேர்ந்து அப்பெண்ணின் தம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ்குமார், அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்