கோவில் நிர்வாகத்தில் குளறுபடி நடப்பதாக வழக்கு - அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் நிர்வாகத்தில் குளறுபடி நடப்பதாக வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-02-20 20:26 GMT


சிவகங்கை மாவட்டம் திடக்கோட்டையை சேர்ந்த கருப்பையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திடக்கோட்டையை அடுத்த இருமதி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக உள்ளேன். இந்த கோவில் திருவிழா உள்பட அனைத்து நிகழ்வுகளுக்கும், பொதுமக்களிடம் இருந்தும் பெறப்படும் காணிக்கையின் மூலம் செலவிடப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த சிலர் கோவிலின் வருவாயை உரிமை கொண்டாடி வருகின்றனர்.

கோவிலுக்கு சொந்தமாக 500 பவுன் தங்க நகைகள் இருந்தன. இந்தநிலையில், தற்போது 100 முதல் 120 பவுன் தங்க நகைகள் உள்ளன. எனவே இந்த கோவில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்