முகநூலில் பதிவேற்றம் செய்தவர் மீது வழக்கு

மேலூர் அருகே ஆபாச படத்தில் மனைவியின் உருவத்தை பொருத்தி முகநூலில் பதிவேற்றம் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-04-09 19:52 GMT

மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 27 வயதான தொழிலாளிக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் முகநூலில் போலி கணக்கை உருவாக்கி அதில் ஆபாச படத்தில் மனைவியின் முகத்தை பொருத்தி பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்