தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு

தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-01-12 20:06 GMT

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு நேரத்தில் திரைப்படங்களை திரையிடக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் சில தியேட்டர்களில் தடையை மீறி படங்கள் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவில் ரசிகர்கள் தியேட்டர்கள் முன் அதிகமாக கூடினார்கள். இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின்பேரில் நடிகர் அஜீத் நடித்த துணிவு மற்றும் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை திரையிட்ட தியேட்டர்களின் உரிமையாளர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்