முக்கிய ஆவணங்கள் திருடியவர் மீது வழக்கு

மதுரை ஐகோர்ட்டில் முக்கிய ஆவணங்கள் திருடியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-29 19:27 GMT

மதுரை, 

மதுரை ஐகோர்ட்டு கிளையில் குற்றப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றுபவர் சோமசுந்தரம். சம்பவத்தன்று இவர் மதுரை ஐகோர்ட்டில் உள்ள போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் தங்கள் அலுவலகத்தில் உள்ள முக்கிய வழக்குகளின் ஆவணங்கள் திருடு போய் விட்டதாக தெரிவித்து இருந்தார். மேலும் இந்த திருட்டிற்கு வக்கீல் ஒருவரின் குமாஸ்தா ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்தபுகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்